சர்ச்சைக்குரிய நீதிபதிக்கு மேலும் இரண்டு ஆண்டுக்கால கூடுதல் நீதிபதியாக பணியாற்ற வழங்கப்பட்ட கால அவகாசம் ஓராண்டாக குறைத்தது மகாராஷ்டிரா அரசு அதிரடி உத்தரவு!
மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கானேடிவாலா கடந்த ஜனவரி மாதம் அளித்த தீர்ப்பில், “ 12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றமாகாது. உடலோடு உடல் தொடர்பில் இல்லை” என்றும், அதனைத் தொடர்ந்து சமீபத்தில் மற்றொரு வழக்கில் “ 5 சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை” எனக்கூறி தண்டனை பெற்றவரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நீதிபதியின் இந்த தீர்ப்புகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. மேலும், தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வழக்குத் தொடர்ந்தன. இதன் காரணமாக நீதிபதியின் இந்த தீர்ப்பினை ஒத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதிமன்ற கொலிஜியம் புஷ்பா கானேடிவாலாவை நிரந்தர நீதிபதியாக பரிந்துரைத்திருந்ததை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா அரசு வெளியிட்ட அறிக்கையில், “மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புஷ்பா கனேடிவாலா 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஓர் ஆண்டுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்” என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.