#Mollywood | ஜித்தின் கே. ஜோஸ் படத்தில் விநாயகனுக்கு வில்லனாகும் மம்மூட்டி!

நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின்…

Jithin K. Mammootty to be Vinayak's villain in Jose!

நடிகர் மம்மூட்டியின் புதிய படத்தின் தகவல் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படத்தை தயாரிக்கிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. இதில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகன் நடிக்கிறார். இக்கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர்கள் ப்ருத்விராஜ், ஜோஜு ஜார்ஜிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் விலக, விநாயகன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆச்சரியமாக, இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விநாயகனுக்கு வில்லனாக நடிகர் மம்மூட்டி நடிக்கிறாராம். புழு, பிரம்மயுகம் படத்தில் வில்லனாக நடித்து அசத்திய மம்மூட்டி, மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், டேக் ஆஃப், சியூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேஷ் நாராயணன் அடுத்ததாக இயக்கும் படத்தில் மம்மூட்டி, மோகன்லால் 16 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.