முக்கியச் செய்திகள்இந்தியா

நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை உயர்த்தியது ஜியோ!

நுகர்வோருக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக தனது 5ஜி மொபைல்களுக்கான புதிய திட்டங்களில், கட்டணங்களை உயர்த்தியுள்ளதாக ஜியோ நிறுவனம்  தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 19 பிளான்களின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,   “செல்போன் கட்டணம் 12% முதல் 25 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 155 ஆக இருந்த மாதக் கட்டணம் ரூ. 189 ஆகவும், ரூ 399 ஆக இருந்த கட்டணம் ரூ. 449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 28 நாள்களுக்கான 2ஜிபி திட்டம் ரூ.299-லிருந்து ரூ.349 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற ஜூலை 3 ஆம் தேதியில் முதல் அமலாகும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத் தலைவர் ஆகாஷ் எம்.அம்பானி கூறுகையில், “புதிய திட்டங்களின் அறிமுகமானது, 5ஜி மற்றும் செய்யறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் செய்யும் முதலீடுகள் மூலம் நிலையான வளர்ச்சியை மேம்படுத்தும். இது எங்கும் நிறைந்த, உயர்தர, மலிவான இணையதளமாகும். டிஜிட்டல் இந்தியாவின் முதுகெலும்பான ஜியோ, இதற்கு பங்களிப்பதின் மூலம் பெருமிதம் கொள்கிறது. ஜியோ எப்போதும் நம் நாட்டிலும், வாடிக்கையாளரிடத்திலும் முதலிடத்தில் உள்ளது. மேலும், இந்தியாவுக்காக தொடர்ந்து முதலீடு செய்துகொண்டே இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

Web Editor

என்னாச்சு? அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம்

Gayathri Venkatesan

ஆப்ரேஷன் கஞ்சா 2.0 – டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

Arivazhagan Chinnasamy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading