அமேசானின் சி.இ.ஓ பதவியில் இருந்து விலகுகிறார் ஜெஃப் பெசோஸ்

அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், அந்தப் பொறுப்பில் இருந்து இன்று விலகுகிறார். உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் இருந்து…

அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரியான ஜெஃப் பெசோஸ், அந்தப் பொறுப்பில் இருந்து இன்று விலகுகிறார்.

உலகின் பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஜெஃப் பெசோஸ் இருந்து வருகிறார். 27 வருடங்களுக்கு முன் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக, அமேசான் நிறுவனத்தைத் தொடங்கிய ஜெஃப், இப்போது உலகின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவர்.

அமேசானின் தற்போதைய சந்தை மதிப்பு 1.7 லட்சம் கோடி டாலர். கடந்தாண்டு அமேசானின் வருமானம் 38,600 கோடி டாலர். ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர்

அமேசான் தொடங்கிய காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார், ஜெஃப் பெசோஸ். அவர் இன்று அமேசானின் சி.இ.ஒ பதவியை ராஜிநாமா செய்கிறார். இனி அவருடைய விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உள்ளிட்ட பிற திட்டங்களுக்கு அதிக நேரத்தை செலவழிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.