நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.
ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் இந்த மாதம் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தொடர்ந்து, மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகவுள்ள தனி ஒருவன் பாகம் 2-ன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில், ராஜேஷ் எம் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான திரைப்படம் ’ஜேஆர் 30’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து உள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆகி உள்ளது.







