25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

ஆகஸ்டில் வெளியாகும் ஜெயம் ரவி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘இறைவன்’ -படக்குழு அறிவிப்பு!

ஜெயம் ரவியின் ‘இறைவன்’ திரைப்படம் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாமனன், ‘என்னென்றும் புன்னகை’, ‘மனிதன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

‘தனி ஒருவன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இப்படம், நான்கு மொழிகளில் ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது. 

இந்த வெற்றி கூட்டணியில் வெளியாகவுள்ள இப்படம் ஹிட்டாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சிறப்பு திட்டங்கள் திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

Web Editor

பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு நகை, பணம் கொள்ளை; இரண்டு பேர் கைது

Halley Karthik

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்! 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பு!!

Web Editor