பாஜகவுக்கு எதிராக ஜனநாயக கட்சிகளை ஒன்று சேர்க்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஓராண்டு முழுவதும் கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி, கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தக் பொதுக்கூட்டத்தில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் கலந்துகொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “கட்டுமரமாக மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் கவிழ்த்து விடமாட்டேன் என்று சொல்லி 95 வயது வரை வாழ்ந்த தமிழன தலைவர் நூற்றாண்டு விழா. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிரின் நூற்றாண்டு விழாவினை இந்த ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்திருந்தோம் ஆனால் ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்து காரணமாக ஜூன் மூன்றாம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியை ஒத்தி வைக்க நேர்ந்தது.
அன்று நடைபெறுவதாக இருந்த அத்தனை நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டது. அதனைத் தான் கருணாநிதி விரும்பி இருப்பார். 95 ஆவது ஆண்டு வரை வாழ்ந்த கருணாநிதி இன்னும் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் இன்று இங்கு இருந்திருப்பார். முதுமையின் காரணமாக நம்மை விட்டு பிறந்தார்.
பிரிந்தார் என்று சொல்வதை விட எங்கும் இருந்து நம்மை கவனித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும். எந்த நிகழ்ச்சி எந்த விழா எந்த நிலைப்பாடு எடுத்தாலும் எங்கும் இன்று நம்மை கவனிக்கிறார் என்று தான் நான் நாள்தோறும் நினைத்து வருகிறேன். இந்த மேடையில் கருணாநிதி அமர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.
1949 செப்டம்பர் 14 ஆம் நாள் ராபிசன் பூங்காவில் திராவிட கழகம் தொடங்கப்பட்டது அதே இடத்தில் தான் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கழகம் தோன்றிய வடசென்னையில் இந்த நூற்றாண்டு விழா கொண்டாடுவது பொருத்தமானது.
நான் எதிர்பார்த்ததை விட மிக பிரமாண்டமாக இதை நடத்தி காட்டி இருக்கிறார் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர். செயல் பாபு செயல் பாபு என்னால் எப்போதும் அழைக்கப்படும் சேகர்பாபு அவருக்கு தோளோடு தோளோடு தோல் நின்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எனது தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓராண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா பிறந்தநாள் விழாவை கொண்டாட இருக்கிறோம். திராவிட மாடல் கோட்பாடுகளுடன் ஆட்சியை நடத்துகிறோம் என்றால் அதற்கு அடித்தளம் நடத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி . திராவிட மாடல் என்ற சொல்லை கேட்டு சிலர் பயப்படுகிறார்கள். எல்லாருக்கும் எல்லாம் கிடைத்து விடக் கூடாது என்பவர்கள், தான் திராவிட மாடலை எதிர்த்து வருகிறார்கள். திராவிட மாடல்தான் தமிழ்நாடு என்கிற மாநிலத்தை தலைசிறந்த மாநிலம் என்று காட்டக் கூடியது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சென்னை துவங்க உள்ள கருணாநிதிமருத்துவமனை, கருணாநிதி நினைவுச் சின்னங்கள் மாதந்தோறும் திறக்கப்பட உள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிரான ஜனநாயக கட்சிகளை ஒன்று சேர்த்தாக வேண்டும்.
ஒடிசா முதலமைச்சர் பீகார் மாநிலத்திற்கு வரவேண்டும் அகில இந்திய தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ள போகிறது என்று அழைத்தார். அகில இந்திய தலைவர்கள் மாநிலக் கட்சி தலைவர்கள் அனைத்தையும் ஒன்றிணைக்க பேசி வருகிறேன். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று பிரிவினைகளால் பாஜக வெள்ளப்பார்க்கும். அதற்கு அகில இந்திய கட்சித் தலைவர்கள் மாநில தலைவர்கள் இறையாகி விடக்கூடாது.
தமிழகத்தில் உள்ள இருப்பவர்கள் சித்து விளையாட்டுகள் எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். மக்களும் நம்முடன் இருக்கிறார்கள் நம் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனவே நமது உள்ளத்தை ஒற்றுமையால் கட்டமைப்போம். நீ நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது நாம் என்று சொன்னால் தான் உதடுகள் ஒட்டும் என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்பொழுதும் சொல்லுவார்.
அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற தேர்தல் நமக்காக இல்ல நாட்டிற்காக என்று உறுதி எடுப்போம் சபதம் எடுப்போம். வருகின்ற 23ஆம் தேதி பீகாரில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு பங்குபெறுமாறு அந்த மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் அழைப்பு விடுத்திருக்கிறார்” எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.