ரஜினிகாந்த், சிவகார்த்திகேயனுடன் மோதும் ஜெயம் ரவி… ‘பிரதர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா,…

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிரதர்’. ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, சரண்யா பொன்வண்ணன், நடராஜன் சுப்பிரமணியம், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், தீபாவளிக்கு (அக்டோபர் 31) வெளியாகும் என நடிகர் ஜெயம் ரவி தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தீபாவளியன்று ரஜினிகாந்த்தின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சிவகார்த்திகேயனின் அமரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஜெயம் ரவியின் பிரதர் படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.