நடிகர் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தின் வசூல் இந்தியாவில் ரூ.500 கோடியை தாண்டியுள்ளது.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ரிலீசானது. நயன்தாரா தீபிகா படுகோனே பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, ரிதி டோக்ரா, லெஹர் கான், கிரிஜா ஓக், சஞ்சீதா பட்டாச்சார்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதல் நாளில் இந்தியாவில் ₹75 கோடி வசூல் செய்தது. முதல் வாரத்திலேயே ₹389 கோடி வசூலித்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது வாரத்தை முடிக்கும் முன்பே ₹500 கோடியை தாண்டியுள்ளது.
பதான், பாகுபலி, தி கன்க்ளூஷன் மற்றும் கதர் 2 ஆகிய படங்களுக்குப் பிறகு இந்தியாவில் நான்காவது அதிக வசூல் செய்த ஹிந்திப் படமாக ஜவான் தற்போது உள்ளது. இது சமீபத்தில் கேஜிஎஃப் 2 ஹிந்தி வசூலை முறியடித்துள்ளது. உலகளவில் பாக்ஸ் ஆபிஸில், ஜவான் ₹.883 கோடி வசூல் செய்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஜவான் ₹500 கோடியைத் தாண்டிய நிலையில், பகலில் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் பங்கேற்ற ஷாருக், இரவில் ஆண்டிலியாவில் முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான், இளைய மகன் அப்ராம் கான் மற்றும் மாமியார் சவிதா சிப்பர் ஆகியோரும் பங்கேற்றனர்.
ஏற்கனவே ஷாருக் நடித்த பதான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், தற்போது ஜவானும் அதிக வசூலை குவித்து வருகிறது.