ஜம்மு-காஷ்மீர்: கிஷ்த்வாரில் மீண்டும் நிலஅதிர்வு!

ஜம்மு காஷ்மீர் இன்று காலை மீண்டும் நில அதிரவு உணரப்பட்டது.  ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று காலையில் மக்கள் மற்றும் குழந்தைகள் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லும் போது, ​​ நில…

ஜம்மு காஷ்மீர் இன்று காலை மீண்டும் நில அதிரவு உணரப்பட்டது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் இன்று காலையில் மக்கள் மற்றும் குழந்தைகள் அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்லும் போது, ​​ நில அதிர்வை உணர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிலஅதிர்வின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 3.6 என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  இந்த நில அதிர்வால் உயிரிழப்போ,  உடைமைச் சேதமோ ஏற்படவில்லை என இதுவரை கிடைத்த தகவல்களின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.  செவ்வாய்க்கிழமை காலை 8.53 மணியளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.