ஜமைக்கா நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில், திருநெல்வேலி மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 31 வயதான விக்னேஷ் என்ற இளைஞர் இறந்தார்.
அவரது உடலை சொந்த ஊர் கொண்டுவர 25 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறப்பட்டது. இதுகுறித்து அறிந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இளைஞரின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில் ஏறத்தாழ 3 மாதத்திற்கு பிறகு அவரது உடலானது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.








