முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் ஜல்லிக்கட்டு – அமைச்சர் தா.மோ அன்பரசன்

முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி சென்னை அடுத்த படப்பையில் வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினின் 70 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
மார்ச் 5 ஆம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட  திமுக சார்பில் முதல்முறையாக
சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கேற்கும் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு
போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா மோ அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது..

வரலாற்றில் முதல்முறையாக சென்னைக்கு அடுத்த படப்பை கரசங்கால் பகுதியில்
பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. சென்னை மாநகர் மற்றும் புறநகர்
பகுதி மக்களின் நீண்ட கால ஏக்கம் தீரும் வகையில் நடத்த  இப்போட்டியை நடத்த இருக்கிறோம்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் பெயரில் ஒரு காளை உட்பட
தமிழகத்திலேயே சிறந்த 501 காளைகள் இடம் பெற உள்ளது மேலும் தமிழகத்திலேயே
சிறந்த மாடுபிடி வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்

கூடுதல் சிறப்பாக வேறு எங்கும் இல்லாத வகையில் முதல் முறையாக மாடுபிடி
வீரர்களுக்கு காப்பீடு வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பெறும் காளைக்கு கார் பரிசாகவும், முதல் மாடுபிடி வீரருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும் அனைத்து காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு வழங்க இருக்கிறோம்.

ஏற்கனவே பலமுறை ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒருங்கிணைத்த ஜல்லிக்கட்டு பாதுகாப்பு
சங்கத்தோடு இணைந்து இப்போட்டியை நடத்த திட்டமிட்டு உள்ளோம். தேவையான சுகாதார வசதிகள், பார்வையாளர்களுக்கான வசதிகள், காளை மாடுகளுக்கு
மாடுபிடி வீரர்களுக்கான வசதிகள் செய்து தர திட்டமிட்டு இருக்கிறோம்.

பத்தாயிரம் நபர்கள் போட்டிகளை பார்ப்பதற்கு வரக்கூடும்  என எதிர்பார்க்கப்படுகிறது.
பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் . ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு இதற்கான பணிகள் தொடங்கி விட்டது இன்னும் இரண்டு மாதங்கள் இருப்பதால் தேவையான ஏற்பாடுகளை விரைவில் செய்து முடிப்போம்.

சென்ற ஆண்டே போட்டியை நடத்துவதற்கு திட்டமிட்டோம். ஆனால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றால் நடத்த முடியவில்லை.  எனவே இந்த ஆண்டு தமிழக முதலமைச்சரின் பிறந்த நாளை ஒட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.” என்று  அமைச்சர் தா மோ அன்பரசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: முதல்வர் பழனிசாமி

EZHILARASAN D

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை; ஈரோடு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு!

Saravana

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆனாலும் சாதிய கட்டுகளை உடைக்க முடியவில்லை: உயர்நீதிமன்றம்

EZHILARASAN D