ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் பட குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜெயிலர் எனப் பெயர் வைக்கப் பட்டுள்ளது. நெல்சனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த அனிருத் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஏற்கனவே ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட, தர்பார் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவ்விரு படங்களின் பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்கள் மத்தியில் மாபெறும் வரவேற்பை பெற்ற நிலையில், அனிருந் இந்த படத்தில் என்ன செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
ஏற்கனவே வெளியான ஜெயிலர் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேர்ப்பை பெற்றுள்ள நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் பட குழு புதிய டீசர் ஒன்றை வெளியிட்டு நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிரது.