ஜெயிலர் பிரமாண்ட வெற்றி: ரஜினிக்கு ரூ.1.64 கோடி மதிப்பிலான கார் வழங்கினார் கலாநிதி மாறன்!

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு, அத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரூ.1.64 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கினார்.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள…

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு, அத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரூ.1.64 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கினார். 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை சுமார் 525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் படம் அபார வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது ரஜினிக்கு காசோலை ஒன்றை அவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சுமார் 1.64 கோடி மதிப்பிலான BMW X7 மாடல் சொகுசு கார் ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், வீட்டில் இருந்து ரஜினியை அழைத்து வரும் கலாநிதி மாறன், காரை காட்டுகிறார். அதனை பார்த்து ரஜினி ஆச்சரியம் அடைகிறார். பின்னர் காரின் சாவியை ரஜினியிடம் வழங்குவதுடன் அந்த வீடியோ நிறைவடைகிறது. .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.