மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது..!

மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சிகள் இணைந்து குரூப் படம் எடுத்துக் கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்…

மும்பையில் I.N.D.I.A கூட்டணியின் 2ம் நாள் கூட்டம் தொடங்கியது. முன்னதாக எதிர்கட்சிகள் இணைந்து குரூப் படம் எடுத்துக் கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து INDIA என்ற பெயரில் கூட்டணியை உருவாக்கியுள்ளன.

பீகார், பெங்களூரு எதிர்கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து இந்த கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் இன்றும் நாளையும் மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் உள்ள நிலையில், 3வது ஆலோசனைக் கூட்டத்தில் மேலும் 2 கட்சிகள் இணையும் என தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் முதல் நாள் ஆலோசனை கூட்டம், நேற்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வியூகம், கூட்டணி கட்சிகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு குழு அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்தியா கூட்டணிக்கு என உருவாக்கப்பட்ட இலச்சினை லோகோ இன்று வெளியீடுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது .

Imageஇதன்தொடர்ச்சியாக இன்று  2-வது நாளாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் தொடங்கியது. முன்னதாக கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு எதிர்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றாக சேர்ந்து குரூப் படம் எடுத்துக் கொண்டனர். கூட்டணிக்கு டெல்லியில் தலைமை அலுவலகம் அமைக்கவும், கூட்டணியை ஒருங்கிணைக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ‘INDIA’ கூட்டணியின் லோகோ இந்தக் கூட்டத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.