ஜெயிலர் பிரமாண்ட வெற்றி: ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கு பரிசளித்த கலாநிதி மாறன்..!

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொகுசு காரை பரிசளித்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுக்கு காசோலையை அளித்துள்ளார்.    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்…

ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சொகுசு காரை பரிசளித்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சனுக்கு காசோலையை அளித்துள்ளார். 

 

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது.
இதுவரை சுமார் 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெயிலர் படம் அபார வெற்றி பெற்றதையடுத்து நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேற்று நேரில் சந்தித்தார். அப்போது ரஜினிக்கு காசோலை ஒன்றை அவர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து சுமார் 1.64 கோடி மதிப்பிலான BMW X7 மாடல் சொகுசு கார் ஒன்றையும் அவர் வழங்கியுள்ளார்.

https://twitter.com/sunpictures/status/1697572652679102644?t=eoGrT3lVogfS8ZBBTklGlw&s=19

இந்நிலையில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ஜெயிலர் பட இயக்குநர் நெல்சனுக்கு காசோலை ஒன்றை வழங்கியுள்ளார். அந்த புகைப்படத்தை படக்குழு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு கார் கொடுத்த தருணத்தில் இயக்குநருக்கு பரிசளிக்காதது சமூகவலைதளங்களில் பெரிதும் பேசுபொருளாக இருந்தது. இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.