ஜாக்சன் துரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், சிபிராஜ் இரண்டு விதமான வேடங்களில் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான படம், ‘ஜாக்சன் துரை’. இதை பி.வி.தரணிதரன் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. படத்தை ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
இதில், சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உட்பட பலர் நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் கதை நடக்கிறது. பிரிட்டிஷ் கால கட்டத்தைக் கொண்டு வர, அக்காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல செட் அமைத்து படமாக்கவுள்ளனர்.
https://twitter.com/Sibi_Sathyaraj/status/1687086195862618112?s=20
இந்த நிலையில், ஜாக்சன் துரை 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்தப் படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் காட்சியமைக்கப்பட்டுள்ளதால் சிபிராஜ் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். சத்யராஜ் பிரிட்டிஷ் அதிகாரியாக நடிக்கிறார்.







