போலீஸ் வாகனம் மோதி பலியான இந்திய வம்வாளி மாணவிக்கு பட்டம் வழங்க அமெரிக்க பல்கலைக்கழகம் முடிவு!

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவிக்கு முதுகலை பட்டம் வழங்க அவர் படித்த சியாட்டில் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளி மாணவி…

அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்த இந்திய வம்சாவளி மாணவிக்கு முதுகலை பட்டம் வழங்க அவர் படித்த சியாட்டில் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சியாட்டில் நகரில் இந்திய வம்சாவளி மாணவி ஜாஹ்னவி கந்துலா போலீஸ் வாகனம் மோதியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர், கேலி செய்து சிரிக்கும் வீடியோ வெளியானது. ஜாஹ்னவி கந்துலாவின் மரணத்தைக் கையாளும் ஊடகங்கள் உட்பட சமீபத்திய செய்திகள் ஆழ்ந்த கவலையளிப்பதாக சான்பிரான்ஸிஸ்கோ இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜாஹ்னவி கந்துலாவுக்கு பட்டம் வழங்க அவர் படித்த பல்லைக்கழகம் முடிவு செய்துள்ளது. அவர் Northeastern பல்கலைக்கழக்தில் information systems முதுகலை பட்ட படிப்ப படித்து கொண்டிருந்த போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.