‘நான்.. மேலே..மேலே..மேலே.. போயிபுட்டேன்’ – உயர்ந்து கொண்டே போகும் தங்கம் விலை!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து, இன்று சவரனுக்கு ரூ.71,560 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. பின்னர் படிப்படியாக உயர்ந்து தங்கம் விலை ரூ.70 ஆயிரத்தை சில தினங்களுக்கு முன்பு தொட்டது.

இதற்கிடையே, கடந்த சில மாதங்களுக்கு  முன்பு தங்கம் ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 12ம் தேதி ரூ.70 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. அன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,770க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.70,160 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வந்ததாலும் சவரன் ஒன்றின் விலை ரூ.69 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் என்கிற அளவில் விற்கப்படுகிறது அந்த வகையில், தங்கம் விலை நேற்று (ஏப்.17) கிராமுக்கு ரூ.105  ரூபாய் உயர்ந்து ரூ.8,920க்கும், ரூ.840 உயர்ந்து ரூ.71,360க்கு விற்பனை செய்யப்பட்டது  இந்த நிலையில், தங்கம் விலை இன்று (ஏப்.18) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.8,945-க்கும்,, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம்ரூ.110க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000க்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.