‘இது ஜெயிலர் வாரம்’ வைரலாகும் தனுஷ் ட்வீட்!

நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று திரைப்படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில்…

நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று திரைப்படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, மற்றும் விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். ஆக்‌ஷன் படமாக தயாரான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட்10-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இறுதியாக “அண்ணாத்த” படத்தில் ரஜினி ரசிகர்கள் அவரை திரையில் பார்த்தனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி நடிப்பில் திரைக்கு ஒரு படம் வரவிருப்பது, அவரது ரசிகர்களுக்கும் சரி, சினிமா ரசிகர்களுக்கும் சரி நிச்சயம் ஒரு கொண்டாட்டமாகவே இருக்கும்.

இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழா பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், நடிகர் தனுஷ் ‘இது ஜெயிலர் வாரம்’ என்று படத்துக்கு ஆதரவாக வெளியிட்ட ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/dhanushkraja/status/1688426152564809728?s=20

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.