தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அவருடன் சேர்ந்து, பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா பைஜு மற்றும் CWC மோனிஷா ப்ளெஸி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படம் விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.








