கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான்- மேடையிலேயே சொன்ன கவின்!

கிஸ் படத்தின் தலைப்பை இயக்குனர் மிஷ்கின் கொடுத்தார் என படத்தின் கதாநாயகன் கவின் பேசியுள்ளார்.

கோலிவுட்டின் இளம் கதாநாயகர்களில் ஒருவர் கவின். சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த இவரின் லிப்ட், டாடா போன்ற படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில்  டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் கவின், ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் கிஸ் படம் செப்டம்பர் 19ல் ரிலீஸ் ஆகிறது. இதனையொட்டி கிஸ் படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பழக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய படத்தின் கதாநாயகன் கவின்,

‘‘எனக்கு இது 6வது படம். இந்த படத்தின் தலைப்பு இயக்குனர் மிஷ்கினிடம் இருந்தது. அவர் தனது கதைக்கு எவ்வளவு யோசித்து இப்படி வைத்து இருப்பார் என புரியும். ஆனாலும், நாங்கள் தலைப்பை கேட்டபோது எங்களுக்காக எந்த நிபந்தனையும் இன்றி விட்டுக்கொடுத்தார்.

அதேபோல், பர்ஸ்ட் சிங்களை எங்களுக்காக பாடிக்கொண்டுத்த அனிருத், ஒரு வாய்ஸ் ஓவர் கொடுத்த விஜய்சேதுபதி, என்னாலே என்னாலேபாடலை எழுதிக்கொடுத்த விக்னேஷ்சிவன், ஒரு பாடல் பாடிக்கொடுத்த அருண்ராஜா ஆகியோருக்கும் நன்றி.

கிஸ் படத்தில் எத்தனை கிஸ் சீன்கள் இருக்கிறது, தியேட்டர் கவுன்டரில் போய் எப்படி டிக்கெட் கேட்பார்கள் என்று பலரும் கிண்டல் செய்கிறார்கள். படத்தின் தலைப்பு இப்படி இருந்தாலும், அனைத்து தரப்பும், குடும்பத்துடன் போய் பார்க்கிற படமாக கிஸ் இருக்கும். விடிவி கணேஷ் முக்கியமான கேரக்டரில் நடித்து இருக்கிறார்.

அவர் இப்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருந்தாலும், எங்களுக்காக சென்னை வந்து படம் குறித்து பேசினார். அயோத்தியில் நடித்த ப்ரீத்திஅஸ்ரானி ஹீரோயின்.இந்த படம் கொஞ்சம் லேட்டானதால் பல உதவி இயக்குனர்கள் வேறு இடம் போய்விட்டார்கள். விஷால் என்பவர் மட்டும் இதே டீமில் இருந்தார். அவருக்கு ஸ்பெஷல் நன்றி”

என்று பேசி முடித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.