இஸ்ரோ விஞ்ஞானி வீர முத்துவேல் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினராக நியமனம்!

இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

இஸ்ரோ விஞ்ஞானி வீர மூத்துவேல் உள்பட 4 பேரை உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1). பன்னீர்செல்வம், தரமணி உலக தமிழ் ஆராய்ச்சி மைய இணை பேராசிரியர்.

2). வீரமுத்துவேல், இஸ்ரோ விஞ்ஞானி.

3). முரளிதரன், தனியார் தொழில்நுட்ப நிறுவன CEO.

4). சந்திரசேகர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர்.

ஆகியோர் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் கல்வி மேம்பாட்டுக்காக புதியத் திட்டங்களை வகுப்பது, பேராசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சிகளை அளிப்பது, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவது, புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைத் தொடங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட மிக முக்கியப் பணிகளை மேற்கொள்ள 1992ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையால் தொடங்கப்பட்டது உயர் கல்வி மன்றம்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்யும் உயர்கல்வித் திட்டங்கள் மூலம் மாநிலம் நிதியுதவி பெறுவதிலும் இந்த மன்றத்தின் பங்களிப்பு முக்கியம்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.