முக்கியச் செய்திகள்உலகம்இந்தியா

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்: பாலஸ்தீனத்தில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களுக்கு ஹெல்ப்லைன்…

பாலஸ்தீனத்தில் வசிக்கும் இந்திய குடிமக்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை ரமல்லாவில் உள்ள இந்திய தூதரகம் நிறுவியுள்ளதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஹெல்ப்லைனை போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்திய வெளிநாட்டவர்களுக்கு அவசர அல்லது பிற அவசரத் தேவையின் போது உதவி மற்றும் ஆதரவை வழங்குவதே இதன் நோக்கம் என்று அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல் தெரிவிக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அவசர காலங்களில், இந்தியர்கள் 0592916418 என்ற செல்போன் மூலமாகவும், +970592916418 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமாகவும் தொடர்பு கொண்டு உதவி பெறலாம். மேலும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, நிலைமையை கண்காணிக்கவும், தகவல் மற்றும் உதவிகளை வழங்கவும் வெளியுறவு அமைச்சகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள் :

+91-11 230 12113

+91-11-230 14104

 +91-11-230 17905

+91 99682 91988

situationroom@mea.gov.in

டெல் அவிவில் உள்ள இந்திய தூதரகம் 24 மணி நேர அவசர உதவி எண்ணையும் அமைத்துள்ளது. அதை +972-35226748 மற்றும் +972-543278392 என்ற எண்களிலும், cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் ஐடியிலும் அணுகலாம்.

அக்டோபர் 7 ஆம் தேதி காலை, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் எல்லையில் உள்ள வேலிகளை உடைத்துக்கொண்டு இஸ்ரேலுக்குள் நுழைந்தார்கள். நிராயுதபாணிகளை கொடூரமாக கொன்றது மட்டுமின்றி 150 பேரை பணயக்கைதிகளாக பிடித்து காசாவிற்கு கொண்டு சென்றனர். இவர்களில் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 5 நாட்களில் காசா மீது 1700க்கும் மேற்பட்ட வான்வழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதற்குப் பிறகு, இஸ்ரேல் நிறுத்தாவிட்டால், பிணைக் கைதிகள் அனைவரையும் கொன்றுவிடுவோம் என்று ஹமாஸ் மிரட்டியது.

இதனிடையே, இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அபு அல்ஹைஜா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கும் இந்தியா நட்பு நாடு என்றும், காசா பகுதியில் தற்போது நிலவும் நெருக்கடியை தீர்க்க இந்தியா தலையிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

என்னது… ‘காவாலா’ பாடல் காப்பியா?… இணையத்தில் வைரலாகும் எம்.ஜி.ஆர் பாடல்…

Web Editor

’தடுப்பூசிகளை விரைந்து வழங்க வேண்டும்’ – மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

EZHILARASAN D

பயன்படுத்தப்படாத 70 டன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு பொது இடங்களில் வெர்டிகல் கார்டனை அமைத்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி!

Saravana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading