தளபதி 66 படத்தின் தலைப்பு இதுதானா?

நடிகர் விஜய் நடிக்கும் 66வது திரைப்படத்திற்கான பெயர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என…

நடிகர் விஜய் நடிக்கும் 66வது திரைப்படத்திற்கான பெயர் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது

பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநர் வம்ஷி படைப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூவின் வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்து வருகிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதில் சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், யோகிபாபு, ஷாம், ஜெயசுதா, சங்கீதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு ‘வாரசுடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ‘வாரிசு’ என்ற பெயர் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாக இணையவாசிகள் தகவல்களை கசிய விட்டு வருகின்றனர்.

இதில் எது உண்மையான தலைப்பு என்பது படகுழு அறிவித்தால் மட்டுமே உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஜீன் 22 ஆம் தேதி இந்த புதிய படத்தின் அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அப்டேட்ஸ் தலைப்பாக இருக்க வாய்ப்புள்ளதாக கோடம்பாக்கம் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.