தளபதி 67 படத்தின் டைட்டில் இதுதானா?; இணையத்தில் பல தலைப்புகளை பதிவிட்டு வரும் ரசிகர்கள்

தளபதி 67 படத்தின் புதிய போஸ்டரை கைதியின் போஸ்டரோடு ஒப்பிட்டும், படத்தின் தலைப்பு இதுவாக தான இருக்கும் என ரசிகர்கள் பல தலைப்புகளை யூகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம்,…

தளபதி 67 படத்தின் புதிய போஸ்டரை கைதியின் போஸ்டரோடு ஒப்பிட்டும், படத்தின் தலைப்பு இதுவாக தான இருக்கும் என ரசிகர்கள் பல தலைப்புகளை யூகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

வாரிசு கொண்டாட்டத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள், தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். அண்மையில் தளபதி 67 படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என்று தெரிவித்தார்.

https://twitter.com/7screenstudio/status/1620038425763274753?s=20&t=GXfCgp7bdnRtbFfPFs3wCg

தளபதி 67 படத்தில் த்ரிஷா, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியானது. மேலும், கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் உருவாகும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ரசிகர்களின் காத்திருப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தினம்தோறும் பல அப்டேட்டுகளை வாரிவழங்கிக் கொண்டிருக்கிறது படக்குழு. ஏற்கனவே படதின் நடிகர் நடிகைகளின் தகவல்களை வெளியிட்ட படக்குழு தற்போது படத்தின் டைட்டில் குறித்த அப்டேட்டை வெளியிட்டிருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்துச் சென்றுள்ளது. தளபதி 67 படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

https://twitter.com/7screenstudio/status/1621123839865524225?s=20&t=QjcOIAw7AprNvyTD74w1PA

இதற்கான ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை கைதியின் போஸ்டரோடு ஒப்பிட்டும், படத்தின் தலைப்பு இதுவாக தான இருக்கும் என ரசிகர்கள் பல தலைப்புகளை யூகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.