Leo கதை இதுதானா…?

Leo என்ற வார்த்தை கேட்டதும் அனைவரின் மனதில் தோன்றுவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “LEO” திரைப்படம் தான். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல…

Leo என்ற வார்த்தை கேட்டதும் அனைவரின் மனதில் தோன்றுவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் “LEO” திரைப்படம் தான். இப்படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல UPDATEகளை படக்குழு குவித்து வரும் அதே வேளையில், பல சர்ச்சைகளும் குவித்து வருகிறது.

படபிடிப்பின் தொடக்கத்திலிருந்து தற்போதுவரை – இது LCU’வா? – விஜய் Double Action’அ? – வில்லனா? – சிங்கத்துடன் நடிக்கிறாரா? அல்லது அந்த சிங்கமே விஜய் தானா, என பல கேள்விகள் எழுந்துள்ளது. இப்படத்தை குறித்து வந்த செய்திகள், விமர்சனங்கள், தகவல்களை ஒப்பிட்டு கதை இதுதானோ என கணித்துள்ளோம்… அது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கதை காஷ்மீரில் தொடங்குகிறது… அங்கு நடிகர் விஜய் Love Chocolate என ஒரு பேக்கரி நடத்தி வருகிறார், அவர் தனது வாழ்கையை அன்பான மனைவியான திரிஷா மற்றும் பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக கழித்து வருகிறார். அவ்வாறு நிம்மதியாக ஓடிக்கொண்டிருக்கும் அவர் வாழ்க்கையில் எதிர்பாரா விதமாக திடீரென ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இரண்டு திருடர்கள் அவரின் பேக்கரிக்கு வருகின்றனர்.

அவர்கள் அங்கு வம்பு செய்யும்பொழுது விஜய் அவர்களை தெரியாமல் கொன்று விடுகிறார். இதனால் விஜய் முகம் செய்திகளில் பறவிய நிலையில் ஒரு கூட்டம் பழைய பகையுடன் இவரை தேடி வருகிறது. அவர்கள் விஜயை “LEO” என்று கூறி தங்களுடன் அழைக்கின்றனர். விஜய் அதனை மறுக்கையில், பேச்சுவார்த்தை சண்டையில் முடிகிறது, விஜய் ஆக்ரோஷமாக அனைவரையும் கொலை செய்கிறார். அதை திரிஷா பார்த்துவிடுகிறார்.

இங்கு தான் Flashback Open ஆக வாய்ப்புள்ளது.

Flashback’ல் விஜய் பெயர் Leo எனவும் அவர் ஒரு Drug Dealer எனவும் Reveal ஆகலாம். அவர் சஞ்ஜய் டத்தின் தம்பியாக, தாஸ் & கோ புகையிலை தொழிற்சாலையை பார்த்துக்கொள்கிறார். அதில் Intro’வாக தான் “நா Ready” பாடல் உருவாகியுள்ளது. ஒருவேலை கதை LCU’வில் இருந்தால் விஜய் மற்றும் சஞ்ஜய் தத் தான் “Rolex”க்கு Drug Supplier. ஆனால் கதையில் உள்ள Suspense என்னவென்றால் விஜய் ஒரு இரகசிய உளவாளி. “Agent Leo’வாக” சஞ்ஜய் தத்தின் அணியிலிருந்து Information’ஐ AGENT VIKRAM, அதாவது கமலுக்கு கொடுக்கிறார். அதனை குறிக்கும் வரியாகதான் “எல்லா BluePrint’ம் தெரியும் Mission Successfull’அ முடியும்” என வைக்கப்பட்டிருக்கலாம்.

அங்கு விஜய் நம்பகத்தன்மையாக இருந்து சஞ்ஜய் தத்தை கையும் களவுமாக கைது செய்கிறார், அதனை பழிவாங்க தான் சஞ்ஜய் தத் விஜையை கொள்ள காஷ்மீருக்கு ஆள் அனுப்பியிருக்கலாம். அதன் பின் விஜய் சில காரணங்களால் பணியிலிருந்து விலகி, காஷ்மீரில் தனது குடும்பத்துடன் அமைதியாக வாழ்ந்துவரலாம். இங்கு Flashback முடிவடைந்து கதைக்களம் தொடர ஆரம்பிக்கிறது. சஞ்சய் தத் 20 வருடங்கள் கழித்து சிறையிலிருந்து வெளியாகி விஜயை பழிவாங்க இருக்கலாம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் “டில்லி” (கார்த்தி), விஜய் பேக்கரியில் 3வருடம் பணிபுரிந்து இருக்க வாய்ப்புள்ளது. அது இயக்குநர் லோகேஷுக்கு தான் தெரியும்.

இதற்கு நேர்மாறாக விஜய் முழுக்க முழுக்க பயங்கர வில்லனாக இருந்தால்…? கதை எப்படி நகரும்..?

விக்ரம் திரைப்படத்தில் அமரிடம் (Fahadh Fasil) ஒரு போதை பொருள் சிக்கும் அதன் பெயர் “Erythroxylum” என்பார், அதேபோன்று அமர் டீம் பேசிக்கொள்ளும் பொழுது “3மாதங்களுக்கு முன்பு திருச்சியில் நடந்த ஒரு Drug Burst. நம்ம கிட்ட சிக்கிய அதே Substance – Erythroxylum Extract” என்பர். பத்தல பத்தல பாடலில் விக்ரம் ஒரு போதை பொருளை சுவைத்து “Confirmed – Erythroxylum” என்பார். இந்த Erythroxylum Supply செய்வது, கைதியில் – அடைக்கலம் & Gang மற்றும் விக்ரமில் – சந்தானம் (Vijay Sethupathy) gang ஆகும். இந்த Erythroxylum எதுவோ கிடையாது, Leo Title Promo’வில் விஜய் கையில் உள்ள காபி கொட்டைதான்.

இதில் இவர்கள் அனைவருக்கும் லியோ விஜய் தான் மாஸ்டர் சப்ளையர் என்பது தெரிகிறது. விக்ரம் திரைப்படமும் கைதி திரைப்படமும் ஒரே சமயத்தில் நடப்பதால், நிச்சயம் லியோ Prequel படமாக தான் அமையும். விக்ரமின் 11பேர் கொண்ட Pilot BlackSquad’ல் 7 பேர் மற்றும் அவர்களின் குடும்பமும் கொடூரமாக கொல்லப்பட்டதாக தெரிவித்திருப்பார்கள். அவர்கள் எப்பேர்ப்பட்ட வில்லனை தொட்டு இருந்தால் இந்த கதி. விக்ரம் Climax’ல் சந்தானம் “சரக்கு Safe’ஆ இருந்தா போதும், மத்ததை மேல இருக்கறவன் பார்த்துப்பானு” சொல்வதும் அதே போன்றே Rolex (Surya) “சிங்கம் வேட்டையாடும் பொழுது காடே செழிப்பா இருக்குமாம், அப்போ சிங்கம் பட்னியா இருந்தா காடும் பட்னியா இருக்கனும்” னு சொல்வார் – அது ஒரு வேல லியோ விஜயை குறிக்கிறாரோ..?? எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

கதை எப்பேற்பட்டதாக இருந்தாலும் படம் வெளியாக இன்னும் 3 மாதங்களே உள்ளன. இதற்கிடையில் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் உள்ளது, அதிலும் பல கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்ஸ் நமக்காக காத்திருக்கிறது, அதுவரை இதே ஆர்வத்துடன் காத்திருப்போம்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.