முடிந்ததா #SK21 படத்தின் படப்பிடிப்பு ?… இயக்குநர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

‘SK21’ படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில்…

‘SK21’ படம் குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ட்விட்டரில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் ‘மாவீரன்’. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள நிலையில், வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஒடி 80 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

மற்றொரு பக்கம் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தனது அடுத்தப் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார் . SK 21 என்ற டைட்டிலில் உருவாகும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். மாவீரனைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பில் மிரட்டுவார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அதில், “காஷ்மீருக்கு நன்றி, இந்த 75 நாள் படப்பிடிப்புகளும் புதுமையாக இருந்தது. இடைவிடாத முயற்சியில் ஈடுபட்ட படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றி.

குறிப்பாக உலகநாயகன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் மகேந்திரன் சார் உள்ளிட்டவருக்கு நன்றி” என்று பதிவிட்டு SK 21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.