உருவாகிறதா 96 திரைப்படத்தின் 2-ம் பாகம்? #DirectorPremKumar கொடுத்த அப்டேட் என்ன?

96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருப்பதாக அதன் இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இத்திரைப்படம் பள்ளி…

Is the second part of 96 in the making? What does #DirectorPremKumar have to say?

96 திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க திட்டமிட்டிருப்பதாக அதன் இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி – த்ரிஷா நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘96’. இத்திரைப்படம் பள்ளி பருவ காதலை கூறும் விதமாக அமைந்தது. பள்ளி பருவத்தில் பிரிந்த காதலியை பல ஆண்டுகள் கழித்து சந்தித்த காதலனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அழகாக கூறியிருந்தார் இயக்குநர் பிரேம்குமார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது 6 ஆண்டுகளுக்குப் பின் பிரேம்குமார், நடிகர் கார்த்தியின் 27வது படத்தை இயக்கி வருகிறார். மெய்யழகன் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் செப். 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த சூழலில், நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் பிரேம் குமார் கூறியதாவது, ”96 படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதிவிட்டேன். நான் எழுதியதில் எனக்கு மிகவும் நெருக்கமானது இதுதான். விஜய் சேதுபதி தரப்பில் சொன்னேன். அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தாக, இந்த கதையை படமாக்கும் ஆர்வம் எழுந்துள்ளது. இயற்கை என்ன திட்டம் வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. பார்ப்போம்.”

இவ்வாறு இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.