‘மார்க் ஆண்டனி’ இப்படம் வெளிவந்த நான்கு நாட்களில் ரூ. 52 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் செப்டம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளியான 4 நாள்களில் உலகளவில் ரூ.52 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மார்க் ஆண்டனி ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவானது குறிப்பிடத்தக்கது.