#JasonSanjay இயக்கும் படத்தின் ஹீரோ இவரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார்.…

Is he the hero of the film directed by #JasonSanjay? New information released!

நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கராக வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். விஜய் நடிப்பில் 2009-ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் திரைப்படத்தில் வரும் ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ பாடலில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் நடனம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக சஞ்சய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்டப்படிப்புக்காக அவர் வெளிநாடு சென்றார்.

இந்த சூழலில், விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிறது. ஜேசன் சஞ்சய் இயக்கவுக்க படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கவுள்ள திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தீப் கிஷன் மாநகரம், மைக்கேல், ராயன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.