கன்னியாகுமரியில் அண்ணாமலை போட்டியிட தயாரா? அமைச்சர் மனோ  தங்கராஜ் கேள்வி

கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ்…

கன்னியாகுமரியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். 
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு
விழாவில் கலந்து கொண்ட பால்வளத்துறை அமைச்சர்  மனோ தங்கராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
” பாஜகவினர் சொன்ன எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவேன் என்றார்கள், கொண்டு
வந்தார்களா?, செங்களுடன் நிற்கிறது.  ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை
தருவேன் என்றார்கள், கொடுத்தார்களா?. இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி
தொகைக்காக ஜூலை போராட்டம் நடத்தினார்கள். ஜூலை வந்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டது. யாருக்காவது கொடுத்தார்களா?.
வடநாட்டு கம்பெனியை ப்ரொமோட் செய்ய திட்டமிட்டு பிரச்சாரம் செய்கின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆட்சியில் ஆவின் இந்தியாவிலேயே தலை சிறந்த நிறுவனமாக மாறும். அதற்கான அனைத்து கட்டமைப்புகளும் தமிழகத்தில் உள்ளது. வடநாட்டு  ஆட்சியாளர்களின்கைக்கூலிகள்.வடநாட்டு கம்பெனிகளை ப்ரொமோட் செய்ய ஆவினுக்கு எதிராக பிரச்சாரம்  செய்கின்றனர்.
ஜனநாயக நாட்டில்  ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களை பகிரங்கமாக ED, CBI ஐ வைத்து பயமுறுத்தி, பண பலத்தை வைத்து விலைக்கு வாங்கும் செயல் எங்காவது உண்டா?. தக்க பாடம் விரைவில் கிடைக்கும். ஆனால் இது தமிழ் நாட்டில் நடக்காது. தமிழ்நாடு கலைஞரின் பாசறை. அவர்களின் எந்த செயலும் இங்கு எடுபடாது. கொள்கையால் கட்டப்பட்ட இந்த இயக்கத்தை பிரிக்கவே
முடியாது.
மணிப்பூரில் வெறுப்பு பிரச்சாரத்தை முன் வைத்து கலவரத்தை தூண்டி,
பகைமையை உண்டாக்கும் செயலில் ஈடுபடுகின்றனர். இதன் முதல் குற்றவாளி  பாஜகவும்,  அந்த கட்சியில் உள்ள அமைச்சர்களும் தான்.அண்ணாமலைக்கு  தைரியம் இருந்தால், கன்னியாகுமரியில்  போட்டி போட சொல்லுங்கள்.  நாங்கள் யார் என காட்டுகிறோம். அண்ணாமலை சட்டமன்ற தேர்தலிலோ, பாராளுமன்ற
தேர்தலிலோ போட்டியிட தைரியம் இருக்கிறதா?., நாங்கள் அவரின் டெபாசிட்டை இழக்க
செய்வோம்” என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.