சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஐபிஎஸ் ஷங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர் பிரபாகர் உத்தரவின் பேரில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடம் மாற்றம் செய்யப்பட்டு, புதிய காவல் ஆணையராக ஐ.பி.எஸ் அதிகாரி சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி-யாக இருந்த ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார். மேலும் தமிழக உளவுத்துறை ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.







