“இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை நீக்க ஐபிஎல் நிர்வாகம் சிந்திக்க வேண்டும்” – முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர்!

ஐபிஎல் தொடரிலிருந்து ‘இம்பாக்ட் ப்ளேயர்’ விதியை நீக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பாக்ட் ப்ளேயர்) விதியை நீக்க வேண்டுமென இந்திய…

ஐபிஎல் தொடரிலிருந்து ‘இம்பாக்ட் ப்ளேயர்’ விதியை நீக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பாக்ட் ப்ளேயர்) விதியை நீக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இந்த விதியின் காரணமாக ஆல்ரவுண்டர்கள் பந்துவீச ஊக்குவிக்கப்படுவதில்லை எனவும், இந்த விஷயம் இந்திய கிரிக்கெட்டில் கவனம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில் அவர் பதிவிட்டிருப்பதாவது: ஆல்ரவுண்டர்களை பந்துவீச ஊக்கப்படுத்தாமல் அவர்களின் பந்துவீச்சுக்குத் தடையாக இருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர் (இம்பாக்ட் ப்ளேயர்) விதியை  ஐபிஎல் நிர்வாகம் நீக்க வேண்டும். ஆல்ரவுண்டர்கள் ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசாமல் இருப்பது இந்திய கிரிக்கெட்டில் கவனம் கொடுக்கப்பட வேண்டிய விஷயம். உங்களது கருத்து என்ன்? எனப் பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/WasimJaffer14/status/1733715800111161705?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1733715800111161705%7Ctwgr%5Ebca2f327a55575517bc5f5d1886a805f6ed81061%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dinamani.com%2Fsports%2Fsports-news%2F2023%2Fdec%2F10%2Fimpact-player-rule-in-ipl-not-encouraging-all-rounders-to-bowl-says-wasim-jaffer-4120134.html

இம்பாக்ட் ப்ளேயர் விதியின் படி, போட்டி நடைபெறும்போது எந்த ஒரு அணியும் தங்களது பிளேயிங் லெவனில் உள்ள வீரர் ஒருவருக்குப் பதிலாக அவர்களது அணியில் உள்ள 5 மாற்று வீரர்களில் ஒருவரை களமிறக்கிக் கொள்ளலாம். டாஸ் வீசப்படும்போது ஒவ்வொரு அணியும் பிளேயிங் லெவனுடன் தங்களது 5 மாற்று வீரர்களின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.