ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ நீக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டான்சிங் ரோஸ் என்றழைக்கப்படும் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோவை விடுவித்துள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் டான்சிங் ரோஸ் என்றழைக்கப்படும் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோவை விடுவித்துள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள சூழலில் ஐபிஎல் தொடர் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. ஏனென்றால் அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 23ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் இந்த ஏலமானது நடைபெறுகிறது.

ஐபில் போட்டி கிரிக்கெட் ரசிகர்களின் திருவிழாவாகவே கருதப்படுகிறது. இந்த ஐபிஎல் போட்டிகளில் தங்களின் விருப்பமான வீரர்கள் இடம் பெறுவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

https://twitter.com/ChennaiIPL/status/1592506543144304642

ஐபில் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதில் எந்தெந்த வீரர்கள் இடம் பெறுவார்கள் என்ற விவரத்தை அனைத்து அணிகளும் இன்றைக்குள் சமர்பிக்க வேண்டும் என பிசிசிஐ அறிவுறுத்தியிருந்தது.

அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்து கொள்ளும் மற்றும் விடுவிக்கப்பட்டு இருக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபில் போட்டியில் 4 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டான்சிங் ரோஸ் என்று அழைக்கப்படும் அதிரடி ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ-வை விடுவித்துள்ளது. மேலும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேன் வில்லியம்சனை விடுவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டியில் கூல் கேப்டன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் மகேந்திரசிங் தோனி அணியின் கேப்டனாக இடம் பெறுவார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.