IPL 2024 : ராஜஸ்தான் அணி வெற்றி பெற 222 ரன்களை இலக்காக நிர்ணயித்தது டெல்லி!

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 222 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது. டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின்…

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 222 ரன்கள் இலக்கு நிர்ணயத்துள்ளது.

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை,  பெங்களூரு,  மும்பை,  கொல்கத்தா,  ஹைதராபாத்,  டெல்லி,  பஞ்சாப்,  குஜராத், லக்னோ,  ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதுவரை 55 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று  நடைபெற்று வரும் 56வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.  இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் போரல் – ஜேக் ஃப்ரேசர் இணை அதிரடியாக ஆட்டத்தை தொடங்கியது. குறிப்பாக ஜேக் ஃப்ரேசர் 19 பந்துகளில் அரைசதம் கடந்து விளாசினார். இதையடுத்து, 5ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷாய் ஹோப் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார். அக்சர் படேல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி வந்த அபிஷேக் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் 15 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதையும் படியுங்கள் : திமுகவின் மூன்றாண்டு ஆட்சியில் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் என்னென்ன?

அடுத்து களமிறங்கிய குல்பாடின் 19 ரன்களிலும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழப்பிற்கு டெல்லி அணி 221 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் சர்மா, போல்ட் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு 222 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.