ஐபிஎல் டி20 தொடரின் 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கி, விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதரபாத், பஞ்சாப், டெல்லி, குஜராத், லக்னோ ஆகிய 10 பங்கேற்று விளையாடி வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், நேற்று இரண்டு போட்டிகள் அரங்கேறியது. இதில் முதல் போட்டி பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் சென்னை அணி 19 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டி, இரவு 7.30 மணியளவில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள் : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்!
இதையடுத்து இன்று நடைபெற உள்ள 63வது லீக் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணியளவில் நடைபெறுகிறது.
இதுவரை 12 போட்டிகள் விளையாடி உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். தற்போது குஜராத் அணி புள்ளி பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.
பிளே ஆஃப்களுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றது. கேகேஆர் அணி, தான் விளையாடிய 12 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.