ஐபிஎல் 2024 | டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.  டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மே 7-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது.

இந்த 2 அணிகள் இதுவரை 28 ஐபிஎல் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. டெல்லி அணி 13 முறையும், ராஜஸ்தான் அணி 15 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ராயல்ஸுக்கு எதிராக இதுவரை டிசியின் அதிகபட்ச ஸ்கோர் 207 ஆகும். டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 222 ஆகும்.

 

இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் 3-ல் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆண்டு மார்ச்28 அன்று டிசி மற்றும் ஆர்.ஆர் மோதின. ராஜஸ்தானின் ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்றார். டெல்லி அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜெயித்தது.

அருண் ஜெட்லி ஸ்டேடியம் குறுகிய பவுண்டரிகளைக் கொண்டுள்ளது. ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு நிறைய வாய்ப்புகளை வழங்குகிறது. டெல்லி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி போட்டியில் ஒட்டுமொத்தமாக 13 விக்கெட் இழப்புக்கு 500 ரன்கள் குவிக்கப்பட்டது. கூகுளின் வெற்றி நிகழ்தகவின்படி, ராஜஸ்தான் தனது 11 வது போட்டியில் டெல்லியை வெல்ல 56% வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும், டிசி ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்துமா என்ன நடக்கும் இந்த மேட்ச்சில் என காண ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.