ஐபிஎல் 2023; KKR vs SRH அணிகள் இன்று மோதல்!

ஐபிஎல் தொடரில் இன்றைய 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதில் இன்று நடக்கும்…

ஐபிஎல் தொடரில் இன்றைய 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 19-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது. முதல் போட்டியில் பஞ்சாப்பிடம் தோற்ற கொல்கத்தா அணி அடுத்த இரு ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இதில் பெங்களூருவுக்கு எதிராக ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குர் 20 பந்துகளில் அரைசதம் அடித்ததும், குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் ரிங்கு சிங் தொடர்ச்சியாக 5 சிக்சர் விளாசியதும் கவனத்தை ஈர்த்தது.

இன்றைய போட்டியானது கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுவது, கொல்கத்தா அணிக்கு கூடுதல் பலமாகும். அத்துடன் சுனில் நரின், வருண் சக்ரவர்த்தி, சுயாஷ் ஷர்மா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.ஐதராபாத் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வியை தழுவியது. அதைத் தொடர்ந்து பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே வெற்றி முனைப்புடன் இன்றை போட்டியில் கொல்கத்தாவை சன்ரைஸ் அணி எதிர்கொள்ள ஆயத்தமாக உள்ளது. ஆனால் சுழல் தாக்குதலை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே ஐதராபாத்தின் ஸ்கோர் அமையும். முதல் 3 ஆட்டங்களிலும் சொதப்பிய ஹாரி புரூக் இன்றைய ஆட்டத்திலாவது ரன்வேட்டை நடத்துவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.