யாருக்கு முதலிடம் ; மோதும் சென்னை, பெங்களூரு

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறுமா என அந்த அணி ரசிகர்கள் ஆர்வமுடம் காத்திருக்கின்றனர். ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும்…

இன்றைய போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு சென்னை அணி முன்னேறுமா என அந்த அணி ரசிகர்கள் ஆர்வமுடம் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரிட்சையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்க உள்ளது. இதுவரை இரு அணிகளும் தலா 4 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், பெங்களூரு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்திலும், சென்னை அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்திலும் உள்ளது.


இதனால், இன்றைய போட்டியில் முதலிடத்தை தக்க வைக்க பெங்களூரு அணியும், முதல் இடத்திற்கு முன்னேற சென்னை அணியும் கடுமையாக முயற்சி செய்யும். இதனால், இன்றைய போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சம் இருக்காது. இதுவரை இரு அணிகளும் 26 லீக் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியதில் சென்னை அணி 17 போட்டிகளிலும் பெங்களூரு அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.