E-Sim உடன் வெளியாகும் ஐஃபோன் 14 ப்ரோ?

இதுவரை எந்த ஒரு ஆப்பிள் மொபைலிலும் இல்லாத வகையில் 8 GB RAM உடன் ஐஃபோன் 14 ப்ரோ வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் தனி ஈர்ப்பு…

இதுவரை எந்த ஒரு ஆப்பிள் மொபைலிலும் இல்லாத வகையில் 8 GB RAM உடன் ஐஃபோன் 14 ப்ரோ வெளியாகும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஆப்பிள் தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் தனி ஈர்ப்பு இருந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் ஃபோன் மட்டுமின்றி லேப்டாப், வாட்ச், ஐ-பேட் என பல கேட்ஜட்ஸை உருவாக்கி, கேட்ஜட்ஸ் உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. ஆப்பிள் ஃபோன்களில் மக்களை கவரும் சிறப்பம்சமாக இருப்பது அவற்றின் கேமரா குவாலிட்டியும், ப்ராசஸரின் வேகமும்தான்.

ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த மாடல் மொபைலான ஐஃபோன் 14 ப்ரோ செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 GB RAM கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் தயாரிப்புகளில் 8 GB RAM கொண்ட ஐஃபோன் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி, இந்த ஐஃபோனில் கேமரா குவாலிட்டியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஐஃபோன் 14 ப்ரோவில் 48 மெகா பிக்ஸல் கேமரா இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபோன் டிஸ்ப்ளேயில் ஹோல் பன்ச் (Hole-Punch) மற்றும் பில்-சேப் கட்அவுட் (Pill-Shaped Cutout) இடம்பெற்றுள்ளது. இதில் பில்-சேப் கட்அவுட்டில் உள்ள கேமரா, முன்பக்க கேமராவாகவும், ஃபேஸ் ஐடியாகவும் செயல்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போனில் சிம் கார்டிலும் புதுமையை கொண்டு வருகிறது ஆப்பிள் நிறுவனம். ஐஃபோன் 15-ல் இருந்து e-sim கொண்டு வரப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அதை ஐஃபோன் 14-ல் கொண்டு வர ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது . இந்த e-sim மூலமாக தண்ணீர் உட்புகாத வகையில் ஃபோனை காக்க முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.