ஐபோன் 15 மாடல் அறிமுகம் – முதல் நாளில் அதிகாலை முதலே கடைவாசலில் குவிந்த வாடிக்கையாளர்கள்..!

ஐபோன் 15 மாடல் இன்று அறிமுகமாகியுள்ள நிலையில்  முதல் நாளில் அதிகாலை முதலே கடைவாசலில் வாடிக்கையாளர்கள் குவிந்து போட்டிபோட்டுக் கொண்டு மொபைலை வாங்கி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின்…

ஐபோன் 15 மாடல் இன்று அறிமுகமாகியுள்ள நிலையில்  முதல் நாளில் அதிகாலை முதலே கடைவாசலில் வாடிக்கையாளர்கள் குவிந்து போட்டிபோட்டுக் கொண்டு மொபைலை வாங்கி வருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமாக இருக்கும் அமெரிக்காவின் ஆப்பிள் உலகம் முழுவதும் அறிமுகம் செய்ய உள்ள ஐபோன் 15 ஸ்மார்ட்போன் உற்பத்தியை இந்தியாவில்  துவங்கியுள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் பெரிய சந்தை மதிப்பைக் கொண்டுள்ளது.

ஐபோன் 13 மற்றும் 14-ல் பெரிய அளவில் அப்டேட்டுகள் இல்லை என்று ஐபோன் பிரியர்கள் மற்றும் கேட்ஜெட்ஸ் பிரியர்கள் கவலை அடைந்ததையடுத்து, ஐபோன் 15-இல் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று அந்நிறுவனம் அண்மையில் அறிவித்தது. ஐபோன்கள் பெரும்பாலும் ஒரே வடிவத்தில் மிகவும் சிறிய மாற்றங்களுடன் வெளியாவதே வழக்கம். ஆனால் இந்த ஐபோன் 15ல் முக்கியமாக மிகவும் புதிய வடிவத்தை பெற்றிருக்கும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும், ஐரோப்பிய யூனியன் அனைத்து எலெக்ட்ரானிக்ஸ் ரீசார்ஜபிள் சாதனங்களிலும், டைப்-சி சார்ஜிங் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, ஆப்பிள் தங்களின் பிரத்யேக லைட்னிங் சார்ஜருக்கு பதிலாக டைப்-சி சார்ஜரை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய மாடல்கள் அறிமுகமாகும் முன்னர், பழைய மாடல்களின் மீது அபாரமான சலுகைகள் அறிவிக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. அந்த வரிசையில் ஐபோன் 13 போன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிகிறது. பிளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன் 13 மாடல் மீது இரண்டு மிகப்பெரிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று 11% என்ற நேரடி தள்ளுபடி (Flat Offer); மற்றொன்று ரூ.61,000 வரையிலான எக்ஸ்சேன்ஞ் சலுகை (Exchange Offer).

இந்த நிலையில் ஆப்பிள் 15 மாடல் போனின் விற்பனை மும்பை மற்றும் டெல்லியில் இன்று தொடங்கியது. ஐபோன் 15 மாடலை வாங்குவதற்கு மும்பையின் ஐபோன் ஸ்டோர்களில் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் ஐபோன் பிரியர்கள் காத்திருந்தனர். இதேபோல டெல்லியில் உள்ள சிட்டிவாக் மாலிலும் இன்று அதிகாலை முதலே செல்போன் பிரியர்கள் காத்திருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.