உலக புகழ் பெற்ற கார்களில் ஒன்று மினி கூப்பர். சொகுசு கார்களைத் தயாரிக்கும் இந்நிறுவனம் கூப்பர் எஸ்.இ காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
சமீப காலங்களில் ஆடம்பர எலெக்ட்ரிக் வாகன பிரிவும் மெல்ல வளர்ந்து வருவதை அடுத்து இந்த மாடல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரை பொறுத்தவரை வெறும் 30 யூனிட்களை மட்டுமே முதல் கட்டமாக விற்பனை செய்ய மினி கூப்பர் நிறுவனம் முடிவெடுத்திருந்தது.
ஆனால் அந்த முழு யூனிட்களும் புக்கிங் ஆகிவிட்டதால் அடுத்தகட்ட புக்கிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இம்மாதமே இதன் டெலிவரி தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
இவை வெள்ளை, கருப்பு, கிரே, பச்சை என 4 கலர்களில் கிடைக்கும். இந்தியாவுக்கு மொத்தம் 30 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8.8 அங்குல தொடுதிரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 184 ஹெச்.பி. திறன் கொண்ட மோட்டார் உள்ளது.
மேலும்ஈ 270 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடிய இதில் 32.6 கிலோவாட் பேட்டரி உள்ளது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 270 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 7.3 நொடிகளில் எட்டிவிடும். 36 நிமிடத்தில் 80 சதவீத அளவுக்கு பேட்டரி சார்ஜ் ஆகிவிடும். முழுமையாக சார்ஜ் ஆக மூன்றரை மணி நேரம் போதுமானது. வழக்கமான காரைப் போன்றே வட்ட வடிவிலான முகப்பு விளக்கு, பின்புறம் எல்.இ.டி. விளக்கு உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.








