பொறியியல் மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு பட்டம் – அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம்

பொறியியல் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படித்து பட்டம் பெறலாம் என்ற புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை நவீன தொழில்நுட்ப…

பொறியியல் மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு பட்டப்படிப்புகளை படித்து பட்டம் பெறலாம் என்ற புதிய நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களை நவீன தொழில்நுட்ப வேலைகளுக்கு தயார்படுத்தும் வகையில் மைனர் டிகிரி என்ற புதிய திட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, பின்டெக் மற்றும் பிளாக் செயின் (Fintech and block chain), பொது நிர்வாகம் (Public administration), தொழில்முனைவு (entrepreneurship), பிசினஸ் டேட்டா அனலிஸ்ட் (Buisness data analyst) சுற்றுச்சூழல் நிலைத்தன்மை (Environment sustainablity) ஆகிய 5 பாடங்களையும் படித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2வது டிகிரி வழங்கப்படும்.

பொறியியல் பட்டப்படிப்பு பட்டத்துடன் (Minor degree) மைனர் டிகிரி என்கிற
பெயரில் 2வது பட்டத்தை அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்க உள்ளது. இதன்படி 5வது செமஸ்டர் முதல் 8வது செமஸ்டர் வரை ஐந்து பிரிவுகளாக
பிரிக்கப்பட்டுள்ள பாடத் தலைப்புகளை மாணவர்கள் தங்களின் முதன்மைப் பாடத்துடன் இணைந்து படிக்க வேண்டும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள முதன்மை பாடப்பிரிவுடன் விருப்பப்பட்டால் இந்தப் பாடங்களை படிக்கலாம் என்கிற வாய்ப்பினையும் அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு வழங்கியுள்ளது.

இதன்மூலம் மாணவர்கள் இரண்டு பட்டங்களைப் பெற வழி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் மாணவர்கள் தாங்கள் படித்த முதன்மைப் பாடத்தின் அடிப்படையிலும், மைனர் டிகிரி பாடங்களின் அடிப்படையிலும் வேலைவாய்ப்பைப் பெற முடியும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.