இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தேடு பொறி நாளை முதல் அதன் சேவையை நிறுத்தவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
1995ம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் சேவையை, இணையத்தை பயன்படுத்தத் தொடங்கிய எவரும் பயன்படுத்தாமல் இருந்திருக்க முடியாது. தற்போது கூகுள் குரோம், ஃபயர்ஃபாக்ஸ், போன்றவற்றால், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் பயன்பாடு குறைந்ததால், அதை முற்றிலும் நிறுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே அந்த நிறுவனம் அறிவித்தபடி, நாளையுடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை நிறுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் அனுபவத்தை பெற விரும்புபவர்கள் மைக்ரோசாஃப்ட் எட்ஜ் பிரவுசரை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் எட்ஜ் -இன் பயன்பாட்டைப் பொறுத்தே விண்டோஸ் 10 இயங்குதளத்தின் எதிர்காலம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்வேறு சுவாரஸ்யமான மீம்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.








