முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமம்; ரூ.44,075 கோடிக்கு ஏலம்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டு கொரோனா பேரிடரால் பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்த நிலையில், ஐபிஎல்-லுக்கான மவுசு மட்டும் குறையவில்லை. அந்த ஒரு சீசனில் மட்டும் 4 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை பிசிசிஐ அள்ளிக்குவித்தது. தொலைக்காட்சியில் போட்டியை பார்த்தவர்கள் எண்ணிக்கையும் 25 சதவீதம் அதிகரித்திருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐபிஎல்-லுக்கான வருமானத்தில் பெரும்பகுதி ஒளிபரப்பு உரிமம் மூலமே கிடைக்கிறது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களைக் கவர்ந்த ஐபிஎல் போட்டிகள் சுமார் 125 நாடுகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை சிங்கப்பூரை சேர்ந்த world sports group நிறுவனமும், சோனி நிறுவனமும் வாங்கியிருந்தன. 2008 முதல் 2017ம் ஆண்டு வரை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு சோனி நிறுவனத்திற்கு சொந்தமான சேனல்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்பட்டன. அந்த 10 ஆண்டுகளுக்கான ஒப்பந்த உரிமம் 103 கோடி டாலர்கள்.இந்திய மதிப்பில் அப்போதைக்கு 8 ஆயிரத்து 200 கோடி ரூபாயாகும்.

2017ம் ஆண்டு ஒப்பந்தம் முடிந்ததும், ஒளிபரப்பு உரிமையை கைப்பற்ற பேஸ்புக், ஏர்டெல், ஜியோ, சோனி உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் களத்தில் குதித்தன. ஏலத்தின் முடிவில், ஒளிபரப்பு உரிமையை 5 ஆண்டுகளுக்கு 16 ஆயிரத்து 347 கோடி ரூபாய்க்கு ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம்ஏலம் எடுத்தது. அதாவது ஒளிபரப்பாகும் ஒவ்வொரு போட்டிக்கும் சராசரியாக 54 கோடியே 50 லட்சம் ரூபாயை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பிசிசிஐ-க்கு வழங்குகிறது.

இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டுடன் நிறைவடையுள்ள நிலையில், 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு புதிய ஒப்பந்ததிற்கான ஏலம் இணையதளத்தில் தொடங்கியது. பல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்ட இந்த பந்தயத்தில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமம் 44 ஆயிரத்து 75 கோடிக்கு ஏலம் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 2017ஆம் ஆண்டு ஏல தொகையை விட இரண்டரை மடங்கு அதிகமாகும்.

அதன்படி, தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் 23 ஆயிரத்து 575 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் உரிமம் 20 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனதாக கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி,ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 107 கோடி ரூபாய்க்கும் மேல் பிசிசிஐ லாபம் ஈட்டுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல் கோப்பையை வென்று குஜராத் அணி சாதனை

EZHILARASAN D

மக்கள் மைய அரசை உருவாக்கி உள்ளோம்: பிரதமர் மோடி

Mohan Dass

மதுரையில் குழந்தை விற்கப்பட்ட விவகாரம்; 4 பேர் கைது

G SaravanaKumar