’கோப்ரா’ படத்தின் சென்சார் விவரங்களுடன் கூடிய சுவார்ஸ்ய தகவல்கள்

கோப்ரா படம் குறித்த புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது. விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில்…

கோப்ரா படம் குறித்த புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது.

விக்ரம் நடிப்பில் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற திரைப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, கனிஹா, மிர்னாலினி, மீனாட்சி கோவிந்தராஜன், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்பத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்திற்குக் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இம்மாதம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், ட்ரெலர் குறித்த அப்டேட் வராததால் ரசிகர்கள் ட்ரெய்லர் வருமா வராதா என்ற கேள்விகளோடு சமூக வலைத்தளங்களில் வலம் வந்தனர்.

இதற்குக் கேள்விகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த விவரம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு கூறியுள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது
மேலும் ஏற்கனவே விக்ரம் “விரைவில் கோப்ரா ட்ரெய்லர் வெளியாகும் சில வேலைகள் இருப்பதால் விரைவில் ட்ரெய்லர் வெளியாகும். ட்ரெய்லர் கண்டிப்பாக வரும். ட்ரெய்லர் வெளியிடாமல் படத்தை வெளியிட மாட்டோம். எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.