தமிழ் சினிமா நடிகர்களின் இன்ஸ்டாவில் நடிகர் சிம்பு முதலிடம்…

தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்களின் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 5.4M Followers களை கொண்டு நடிகர் சிம்பு முதலிடம் பிடித்துள்ளார். தற்காலத்தில் ஸ்மார்ட் போனும், சமூகவலைதள பக்கங்களும் இல்லாமல் ஒரு மனிதர் வாழ்வது என்பது…

தமிழ் சினிமா நட்சத்திர நடிகர்களின் சமூகவலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 5.4M Followers களை கொண்டு நடிகர் சிம்பு முதலிடம் பிடித்துள்ளார்.

தற்காலத்தில் ஸ்மார்ட் போனும், சமூகவலைதள பக்கங்களும் இல்லாமல் ஒரு மனிதர் வாழ்வது என்பது சற்று கடினமான ஒன்றே, ஆளுமைகள் தங்கள் கருத்து மற்றும் தகவல்களை தங்களது அதிகாரபூர்வ பக்கத்தில் பகிரும்போது அனைவருக்கும் செய்திகள் எளிதாக போய் சேர்கிறது.

நடிகர் சிம்பு கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் கணக்கு ஆரம்பித்தார். ஆரம்பம் முதலே லட்சக்கணக்கான Followers களை கொண்ட அவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

நடிகர் அஜித், விஜய் தவிர்த்து பெரும்பாலான சினிமா பிரபலங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பயன்படுத்திகொண்டுதான் உள்ளனர். 2021  இந்தாண்டின் இன்ஸ்டாகிராமில் அதிக Followers களை கொண்ட தமிழ் நடிகர்களில் நடிகர் சிம்பு முதலிடத்தை தக்கவைத்துள்ளார்.

முன்னணி தமிழ் சினிமா நடிகர்களும் அவர்களுடைய Followers களின் எண்ணிக்கை

சிலம்பரசன் – 5.4 M

விஜய்சேதுபதி – 4.5M

சிவகார்த்திகேயன் – 4 M

சூர்யா – 3.8 M

தனுஷ் – 3.5M

மாதவன் – 3.1 M

ஜி.வி.பிரகாஷ் -2.8 M

கார்த்தி – 1.6M

கமல்ஹாசன் -1.5M

ஆர்யா – 1M

விஷ்ணு விஷால் -813K

சித்தார்த் – 658 K

ஜீவா -585 K

ஜெயம் ரவி – 325K

விஷால் -223K

நடிகர் ரஜினிகாந்திற்கு கணக்கு இருந்தாலும் அதில் அவர் ஆக்டிவ்வா இல்லை. 2021 ஆண்டு இறுதியில் தற்போது அதிக Followers களை கொண்ட தமிழ் சினிமா பிரபலங்களில் நடிகர் சிம்பு Followers களை கொண்டு முதலிடம் பிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தை பொதுவாக 2K கிட்ஸ்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.

– மா.நிருபன் சக்கரவர்த்தி

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.