முக்கியச் செய்திகள் உலகம் தொழில்நுட்பம் செய்திகள்

குழந்தைகளுக்காக உருவாகும் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலி!

13 வயதிற்குட்பட்ட குழந்தைகளைக் கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் கிட்ஸ் செயலியை அறிமுகபடுத்தயுள்ளது பேஸ்புக் நிறுவனம்.

2012-ஆம் ஆண்டு, பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய இன்ஸ்டாகிராம், உலகம் முழுவதும் ஒரு பில்லியன் பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளது. இந்த செயலியை 13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது உள்ள கட்டுப்பாடுகளின்படி, 13 வயதிற்கு உட்பட்டோர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் பேஸ்புக் தனது தயாரிப்பை அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் இந்த புதிய வசதியைத் தயாரித்துள்ளது. இந்த செயலி, பெற்றோரின் கண்காணிப்பின்கீழ் குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தனது இளம் வயது பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.

கடந்த 2017- ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம், குழந்தைகள் பயன்படுத்தும் வகையில் மெசஞ்சர் கிட்ஸ் எனும் செயலியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஹஜ் பயணம்; மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

G SaravanaKumar

தடுப்பூசி தட்டுப்பாட்டை மத்திய அரசு உணர்ந்துள்ளது – டி.ஆர்.பாலு

Gayathri Venkatesan

நாத்திகம் பேசும் நண்பர்களுக்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் வரிகள்…

G SaravanaKumar