மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…

நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கும்பகோணத்தில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நெல்லையில் பள்ளி இடிந்து விழுந்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும் இனி இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் எனவும் கூறினார்.

இச்சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர் மட்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், நெல்லையில் பள்ளி கட்டட விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

https://twitter.com/mkstalin/status/1471786794869874693

“நெல்லையில் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து துடித்துப் போனேன். அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்; உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு 10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களின் குடும்பத்துக்கு ரூ.3 லட்ச ரூபாயும் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.